பொம்மையாபுரம் பகுதியில் புதன்கிழமை மின்தடை
பொம்மையாபுரம் பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
பசுவந்தனை பகுதியில் பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகிலுள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிக்காக பசுவந்தனை உப மின் நிலையத்தின் கீழ் மின்வினியோகம் பெறும் பொம்மையாபுரம், தீத்தாம்பட்டி, கோவிந்தம்பட்டி, வண்டானம், புதுப்பட்டி, தொட்டம்பட்டி, அச்சங்குளம் ஆகிய பகுதிகளுக்கு இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. என்று கோவில்பட்டி செயற்பொறியாளர் மு. சகர் பான் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story