புதுக்கோட்டையில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
புதுக்கோட்டையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story