சமயநல்லூர் பகுதிகளில் மின்தடை
சமயநல்லூர் பகுதிகளில் மின்தடை
வாடிப்பட்டி
சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வலையபட்டி பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி மற்றும் கரடிகல் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சோழவந்தான் துணை மின் நிலையத்தில் சோழவந்தான் பீடர் மற்றும் வாட்டர் ஒர்க் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் இரும்பாடி, தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் நிலையம், சமயநல்லூர், ஊர்மெச்சிகுளம், வளர்நகர், பாத்திமா நகர், தேனூர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.