சமயபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


சமயபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

சமயபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதைையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை சமயபுரம், மண்ணச்சநல்லூர்ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகர் பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், கூத்தூர், நொச்சியம், பளுர், பாச்சூர், திருவாசி, அழகிய மணவாளம், குமரகுடி, திருவரங்கப்பட்டி, கோவர்த்தக்குடி, பனமங்கலம், எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story