சேத்துப்பட்டு பகுதியில் 12-ந் தேதி மின் நிறுத்தம்


சேத்துப்பட்டு பகுதியில் 12-ந் தேதி மின் நிறுத்தம்
x

சேத்துப்பட்டு பகுதியில் 12-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு பகுதியில் 12-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டு, தேவிகாபுரம், அப்பேடு மற்றும் தச்சாம்பாடி துணை நிலையங்களில் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல் வில்லிவலம், வேப்பம்பட்டு, கோணமங்கலம், வெளுகம்பட்டு, மேல்நந்தியம்பாடி, மருத்துவம்பாடி, இடையான்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கங்கை சூடாமணி, உலகம்பட்டு, அப்பேடு, கூடுவாம் பூண்டி, பெருவலூர், மோடிபட்டு, ஆத்துரை, பரிதிபுரம், தேவிகாபுரம், தச்சாம்பாடி, மொடையூர் நரசிங்கபுரம், தும்பூர், ஓதலவாடி, பத்தியாவரம், ஊத்தூர், கிழக்கு மேடு, கொத்தன்வாடி, ராஜ்மாபுரம், சவரப்பூண்டி, தேவி மங்கலம் மற்றும் சுற்றுப்புற பதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை சேத்துப்பட்டு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு தெரிவித்துள்ளார்.


Next Story