சிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் நாளை மின்தடை


சிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் நாளை மின்தடை
x

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் மட்டும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை சாத்தரசம்பட்டி, கல்லல், அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, மாலை கண்டான், வெற்றியூர் ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை காளையார்கோவில் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட காளையார்கோவில், சொர்னவள்ளி நகர், பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகனி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடி, கல்லத்தி, கருங்காளி, கருமந்தகுடி, பெரியகண்ணனுர், ஒய்யவந்தான், நாட்டரசன்கோட்டை, மேப்பல் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் இருக்காது என காளையார்கோவில் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை கல்லூரி சாலை உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் சிவகங்கை பெருமாள் கோவில், கொட்டகுடி தெரு, மேல ரத வீதி, சாஸ்திரி தெரு, ராம்நகர், மேலூர் சாலை, கோகலே ஹால் தெரு, காந்தி வீதி, மரக்கடை வீதி, தெற்கு ராஜ ரத வீதி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது. இத்தகவலைசிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.


Next Story