தளவாபாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
தளவாபாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆண்டிச்செட்டிபாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட காட்டம்பட்டி பீடர், ராஜபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட எலவனூர் பீடர், ரெங்கநாதபுரம் நிலையத்திற்குட்பட்ட தொழிற்சாலை பீடர், தாளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட மில் பீடர், புகழூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட தொழிற்சாலை பீடர், அரவக்குறிச்சி நிலையத்திற்குட்பட்ட குடிநீர் பீடர் ஆகிய பீடர்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் துக்காச்சி, இச்சிகாட்டூர், காட்டம்பட்டி, சி.வி.பாளையம், சி.எம்.நாயக்கனூர், புளியம்பட்டி, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சை காளக்குறிச்சி, ராஜபுரம், காருடையாம்பாளையம், சுக்கம்பட்டி, காக்காவாடி, கேத்தம்பட்டி, கருப்பம்பாளையம், தளவாபாளையம், புகழூர் 4 ரோடு, கிழக்கு தவிட்டுப்பாளையம், கொத்தாப்பாளையம், பாரதிநகர், மேட்டுக்கடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.