தோகைமலை, அய்யர்மலை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


தோகைமலை, அய்யர்மலை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

தோகைமலை, அய்யர்மலை, நச்சலூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட தோகைமலை, அய்யர்மலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர் மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய 10 துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இந்த 10 துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் குளித்தலை நகரப் பகுதி உள்பட சுமார் 137 கிராம பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என குளித்தலை மின்சாரவாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


Next Story