பல்கலைக்கழகம், நீர்பழனி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பல்கலைக்கழகம், நீர்பழனி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தபடுகிறது.
புதுக்கோட்டை
மாத்தூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொண்டைமான்நல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story