வாத்தலை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்
வாத்தலை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
வேங்கை மண்டலம் துணை மின்நிலையத்தில் வருகிற நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட இடங்களான மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், 2கரியமாணிக்கம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்களான மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிபட்டி, உடையாம்பட்டி, திருப்பஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் மற்றும் தண்டலை, சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதேபோல் வாழவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதிநகர், பெல் டவுன்ஷிப் சி-செக்டர், சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை மன்னார்புரம், ஸ்ரீரங்கம் மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.