இன்று மின்சாரம் நிறுத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஆதலால் மல்லி, மல்லிப்புதூர், ஈஞ்சார், நடுவப்பட்டி, வேண்டுராயபுரம், சாமி நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.
ராஜபாளையம்
அதேபோல ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
ஆதலால் ஆலங்குளம் முக்குரோடு, முத்துச்சாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கங்குளம், காக்கி வாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி,
டி.கரிசல்குளம், தொமங்குளம், சிவலிங்காபுரம், நரிகுளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.
அருப்புக்கோட்டை
பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை, பெரிய புளியம்பட்டி, வேலாயுதபுரம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
எனவே புளியம்பட்டி, சொக்கலிங்கபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், நெசவாளர் காலனி, ராமசாமிபுரம் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், பாளையம்பட்டி, பந்தல்குடி, குருந்தமடம், சுக்கிலநத்தம், வதுவார்பட்டி, ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, செம்பட்டி, நமச்சிவாயபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.