இன்று மின்சாரம் நிறுத்தம்
வடமதுரை, கொசவப்பட்டி, செங்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வடமதுரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, வடமதுரை, புத்தூர், போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மக்குண்டு, சீத்தப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
கொசவப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி கொசவப்பட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியபட்டி, சட்டகாரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம் பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியப்பட்டடி, கோணப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், தவசிமடை, விராலிப்பட்டி ,நொச்சியோடைப்பட்டி, குரும்பப்பட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ராஜக்காப்பட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி. எஸ்.குரும்பப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை திண்டுக்கல் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்தார்.