இன்று மின்தடை
திருச்சுழி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
திருச்சுழி,
திருச்சுழி யூனியன், பரளச்சி மற்றும் முத்துராமலிங்கபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் மேற்கண்ட துணை மின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் பெறும் பொம்மக்கோட்டை, காளையார்கரிசல்குளம், கத்தாளம்பட்டி, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, பூலாங்கால், வடக்குநத்தம், செட்டிக்குளம், தும்மசின்னம்பட்டி, ராஜகோபாலபுரம், தொப்பலாக்கரை, நல்லாங்குளம், குள்ளம்பட்டி, சவ்வாஸ்புரம், மேலையூர், கல்லுமடம், கல்லூரணி, ஆலடிபட்டி, முத்துராமலிங்கபுரம், பரளச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.
Related Tags :
Next Story