இன்று, நாளை மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணிகளுக்காக பந்தல்குடி, விருதுநகர், மல்லாங்கிணறு ஆகிய பகுதிகளில் இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அருப்புக்கோட்டை,
பராமரிப்பு பணிகளுக்காக பந்தல்குடி, விருதுநகர், மல்லாங்கிணறு ஆகிய பகுதிகளில் இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பந்தல்குடி
அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதால் மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
அதேபோல் பாளையம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வி.வி.ஆர். மில், பொய்யாங்குளம், குறிஞ்சாங்குளம், தொட்டியாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்
விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஆதலால் விருதுநகர் அகமது நகர், பரங்கிரிநாதபுரம், பாரதி நகர், நேருஜி நகர், விக்னேஷ் காலனி, பாண்டியன் காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி, சத்திர ரெட்டியபட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்மினியோகம் இருக்காது.
மல்லாங்கிணறு
அதேபோல மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேலதுலுக்கன்குளம், அழகிய நல்லூர், சோலை கவுண்டன்பட்டி, கெப்பிலிங்கம் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
மேலும் பெரியவள்ளிகுளம் துணை நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் விருதுநகர் அல்லம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், பாரதி நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். ேமற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஜெயரங்கா பீடர் பகுதியில் மின்சார சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய பஸ் நிலையம், மங்காபுரம், தென்காசி ரோடு, சின்மயா பள்ளி விவசாய பகுதி ஏரியா, தெற்குவெங்காநல்லூர் விவசாய பகுதி ஏரியா, கணபதி சுந்தர நாச்சியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.