செவலூர், ஆனாம்பட்டி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
செவலூர், ஆனாம்பட்டி பகுதிகளில் இன்று மின் நிறுத்தப்படுகிறது.
திருச்சி
மணப்பாறை, ஜூலை.12-
மணப்பாறை துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செல்லும் செவலூர் மின்பாதை மற்றும் தியாகேசர் ஆலை துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செல்லும் ஆனாம்பட்டி மின்பாதைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை
செவலூர், குதிரைகுத்திப்பட்டி, கருப்பகோவில், பனந்தோப்பு, கீழபொய்கைப்பட்டி, உசிலம்பட்டி, சூளியாபட்டி, கஸ்தூரிப்பட்டி, ஆனாம்பட்டி, திருமலையான்பட்டி, வலையபட்டி, அடைக்கம்பட்டி, சாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story