கதிராமங்கலம், பந்தநல்லூரில் இன்று மின்நிறுத்தம்
கதிராமங்கலம், பந்தநல்லூரில் இன்று மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே உள்ள முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் குறிச்சி, கிழக்காட்டூர், காகிதப்பட்டறை, பந்தநல்லூர், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமனக்குடி, கயலூர், திருக்கோடிகாவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கும்பகோணம் வடக்கு கோட்ட உதவி செயற்பொறியாளர் சுஜாதா தெரிவித்தார்.
Related Tags :
Next Story