மண்ணச்சநல்லூர், மூவானூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
மண்ணச்சநல்லூர், மூவானூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி வேங்கை மண்டலம் துணைமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர் பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 காரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், ஈச்சம்பட்டி, ஆகிய பகுதிகளிலும், மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பிரிவு அலுவலங்களுக்கு உட்பட்ட இடங்களான மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக்கோட்டம், காளவாய்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு ஆகிய பகுதிகளிலும்,புலிவலம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களான புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.