நயினார்கோவில், உப்பூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக நயினார்கோவில், உப்பூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நயினார்கோவில்,
பராமரிப்பு பணி காரணமாக நயினார்கோவில், உப்பூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணி
பரமக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து சத்திரக்குடி மின்பாதையில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நயினார்கோவில் பிரிவிற்கு உட்பட்ட நயினார்கோவில், வல்லம், சிறகிக்கோட்டை, தாளையடிகோட்டை, பகைவென்றி, அக்கிரமேசி, பாண்டியூர், எஸ்.வி.மங்களம், கங்கைகொண்டான், உதயகுடி, நகரம், அரியாங்கோட்டை, வாதவனேரி ஆகிய பகுதிகளிலும் போகலூர் பிரிவிற்க்கு உட்பட்ட சத்திரக்குடி, கொடிக்குளம், முத்துவயல், காமன்கோட்டை, மென்னந்தி, செவ்வூர், கிழக்கோட்டை, பொட்டிதட்டி, மஞ்சூர், அரியனேந்தல் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்து உள்ளார்.
உப்பூர்
ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் உள்ள உப்பூர் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.எனவே உப்பூர், கடலூர், மோர்ப்பண்ணை, சித்தூர்வாடி, அனந்தனார் கோட்டை, காவனூர், துத்திஏந்தல், வெட்டுக்குளம், ஊரணங்குடி, புறக்கரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் திருவாடானை நகரிக்காத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் திருவாடானை, கைகட்டி, அரசூர், பாரூர், கருமொழி, ஓரிக்கோடை, டி.நாகனி, நெய்வயல், மங்களக்குடி, பாண்டுகுடி, குன்சன்குளம், அஞ்சுக்கோட்டை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலைதிருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) நிஷாக் ராஜா தெரிவித்துள்ளார்.