நரிக்குடி பகுதிகளில் இன்று மின்தடை


நரிக்குடி பகுதிகளில் இன்று மின்தடை
x

நரிக்குடி பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

திருச்சுழி,

அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரத்தில் உள்ள துணைமின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா பஞ்சாலையின் ஏ அலகு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.


Next Story