பரமக்குடி, நயினார்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக பரமக்குடி, நயினார்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
ராமநாதபுரம்
நயினார்கோவில்,
பரமக்குடி துணை மின்நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நயினார்கோவில், வல்லம், சிறகிக்கோட்டை, பகைவென்றி, அக்கிரமேசி, பாண்டியூர், எஸ்.வி. மங்களம், கொளுவூர், கங்கைக்கொண்டான் மற்றும் சத்திரக்குடி பிரிவில் சத்திரக்குடி, கொடிக்குளம், முத்துவயல், காமன்கோட்டை, மென்னந்தி, செவ்வூர், கிழக்கோட்டை, பொட்டிதட்டி, மஞ்சூர், அரியநேந்தல், பரமக்குடி நகர் முழுவதும், பெருமாள்கோவில், கமுதக்குடி, எமனேஷ்வரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்செயற்பொறியாளர்கள் புண்ணியராகவன், கங்காதரன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story