ராஜவயல், பள்ளத்திவயல் பகுதிகளில் இன்று மின்தடை
ராஜவயல், பள்ளத்திவயல் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், ராஜவயல், சேதுராமன்வீதி, ரெங்கசாமி வீதி, எம்.ஜி.ஆர். வீதி, தெய்வானை நகர், பாண்டியன் வீதி, ஜெ.ஜெ. வீதி, விவேகானந்த புரம், பரிசகல்பாறை, பள்ளத்திவயல், ராஜா நகர், வள்ளியம்மை நகர், ஐ.டி.ஐ. காலனி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story