ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை


ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை
x

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சவேரியார் பட்டினம் துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆர்.எஸ்.மங்கலம் டவுண், செட்டியமடை, கீழக்காேகாட்டை, பெருமாள்மடை, பெத்தார்தேவன் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருவாடனை மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர்(பொ) நிஷாக்ராஜா தெரிவித்துள்ளார்.

கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓரிவயல் மின்பாதையில் இன்று பராமரிப்பு பணிமேற்கொள்ள இருப்பதால் சவேரியார் சமுத்திரம், சவேரியார் பட்டிணம், மேலச்சிறுபோது, கீழ ச்சிறு போது, காமாட்சிபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் அதேபோல் வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சிக்கல் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணாபுரம் சாதிக் அலி தோப்பு, சிக்கல் கண்மாய், பண்ணந்தை, மறவாய்க்குடி, சேரந்தை, உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதேபோல் சாயல்குடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் முந்தல் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை கீழமுந்தல் மேலமுந்தல், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.


Next Story