ஸ்ரீரங்கம், ேக.சாத்தனூர், வாழவந்தான் கோட்டை பகுதிகளில் இன்று மின்தடை
ஸ்ரீரங்கம், ேக.சாத்தனூர், வாழவந்தான் கோட்டை பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்சாலை, செம்பட்டு, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்தநகர், கே.சாத்தனூர், வடுகபட்டி, பாரிநகர், காஜாநகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
இதுபோல் வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், பெல் டவுன்ஷிப் சி மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்நிலைய சாலை, 4 உத்திர வீதிகள், 4 சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்டபம் சாலை, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் முத்துராமன் (திருச்சி கிழக்கு), செல்வம் (ஸ்ரீரங்கம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.