தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முசிறி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் மேரிமேக்டலின் பிரின்ஸி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொட்டியம் துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பும், துணை மின்நிலைய உபகரணங்களின் சோதனை பணிகளும் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளுர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறுஅவர் அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story