தென்னூர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று மின்நிறுத்தம்
தென்னூர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருச்சி
திருச்சி நகரியம் கோட்டம் தென்னூர் பிரிவுக்குட்பட்ட பாளையம்பஜார், புத்தூர் அக்ரஹாரம், எடத்தெரு, குறத்தெரு, தென்னூர் ஹைரோடு, விஸ்வநாயக்கம்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.30 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி தென்னூர் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story