தேனூர்-கீழப்பெரம்பலூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


தேனூர்-கீழப்பெரம்பலூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x

தேனூர்-கீழப்பெரம்பலூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

குன்னம்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், தேனூர்-கீழப்பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், தேனூர், துங்கபுரம், குழுமூர், சன்னாசிநல்லூர், சிவராமபுரம், கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story