வாங்கல், மணவாடி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
வாங்கல், மணவாடி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர்
கரூர் கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் உள்ள மணவாடி பீடர் மற்றும் குப்புச்சிபாளையம் துணைமின் நிலையத்தில் உள்ள என்.புதூர் பீடரில் இன்று (புதன்கிழமை) மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மணவாடி, ஏமூர், கத்தாளப்பட்டி, கத்தாளப்பட்டிபுதூர், சீத்தப்பட்டி, சின்னதம்பிபாளையம், செல்லிபாளையம், மருதம்பட்டி, வாங்கல், பசுபதிபாளையம், நன்னியூர், என்.புதூர், வடுகதெரு, துவராபாளையம், சிந்தாயூர், கோவில்பாளையம், செவ்வந்திபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story