நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

தேவதானம், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

தேவதானம், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேவதானம்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டி பீடர், ராமன்பட்டி பீடர், தேவதானம் மற்றும் முகவூர் பீடர் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளன.

ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மலையடிப்பட்டி, அழகை நகர், எம்.ஜி.ஆர். நகர், குறிஞ்சி நகர், ராமச்சந்திராபுரம், வேப்பங்குளம், அ.ராமலிங்கபுரம், அச்சம் தவிர்த்தான், நரையங்குளம், தேவதானம், கோவிலூர், முகவூர், பாரதி நகர், தளவாய்புரம், செட்டியார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

விருதுநகர்

அதேபோல விருதுநகர் மின்கோட்டத்தில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் விருதுநகர் பர்மா காலனி, சீதக்காதி தெரு, பெருமாள் கோவில் தெரு, பெரிய பள்ளிவாசல் தெரு, பாரப்பட்டி தெரு, சிவன் கோவில் தெரு, அன்னை சிவகாமி புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

துலுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே துலுக்கப்பட்டி மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளன.

ஆதலால் வெள்ளக்கோட்டை, பந்தல்குடிரோடு, அரசு மருத்துவமனை, நேரு மைதானம், அண்ணாநகர், திருச்சுழிரோடு, ராஜீவ்நகர், ஜெயநகர், விஜயநகரம், பிள்ளையார் கோவில் தெரு, காந்திநகர், பூபால் நகர், ஈ.பி. ரோடு, மீனாட்சி புரம், நேதாஜிரோடு, மேட்டாங்கரை, கைலாச ஊரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.


Next Story