நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x

மணலூர்பேட்டை பெத்தாசமுத்திரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை தேவரடியார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மணலூர்பேட்டை, சித்தப்பட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவடியார்குப்பம், கே.சி.தாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூர், முருக்கம்பாடி, கொங்கணாமூர், கழுமரம், சொறையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனூர், அருதங்குடி மற்றும் மிலாரிப்பட்டு ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமந்தூர், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், தாகம்தீர்த்தாபுரம், குரால், காளசமுத்திரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூர், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுர், சின்னசேலம்(காந்திநகர்)ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.


Next Story