நாளை மின்தடை


நாளை மின்தடை
x

ஆமத்தூர், சங்கரலிங்காபுரம் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள ஜி.என்.பட்டி துணை மின்நிலையத்திலிருந்து ஆமத்தூர் செல்லும் மின் பாதையில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் ஆமத்தூரை சுற்றியுள்ள வெள்ளூர், சேர்வைக்காரன்பட்டி, மேலமாத்தூர், குமாரபுரம், சிதம்பராபுரம், புதுக்கோட்டை, சித்தமநாயக்கன்பட்டி, செவலூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து சங்கரலிங்காபுரம் செல்லும் மின் பாதையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆதலால் சங்கரலிங்காபுரம், தம்மநாயக்கன்பட்டி, கன்னிசேரி, முதலிப்பட்டி, மேலச்சின்னையாபுரம், ஒண்டிப்புலி, நாயக்கனூர், ஓ.கோவில்பட்டி, கட்டனார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.Next Story