நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x

வடுவூர், கோவில்வெண்ணி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

வடுவூர்,கோவில்வெண்ணி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வடுவூர், சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகர், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூர், நத்தம், ஆதனூர், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாப்பேட்டை, கருப்பமுதலியார்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம்,சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், சேர்மாநல்லூர், முனியூர், அவளிவநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் க.பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.


Next Story