நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

காரியாபட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஆவியூர்

அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் ஆவியூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கல்லுப்பட்டி, தொடுவன்பட்டி, புல்லூர், வினோபா நகர், வலையங்குளம், பெருமாள் புதுப்பட்டி, கல்லணை, சேது பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

காரியாபட்டி

அதேபோல காரியாபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளத்துப்பட்டி, பாண்டியன் நகர், அச்சம்பட்டி, சின்ன காரியபட்டி, காரியாபட்டி பஸ் நிலையம், செவல்பட்டி, சித்து மூன்றடைப்பு, சத்திரம் புளியங்குளம், பாப்பனம், கம்பிகுடி, சுந்தரம் குண்டு, வேப்பங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளிலும் நாளை மின்வினியோகம் இருக்காது.

புல்வாய்கரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அ.முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், நாங்கூர், எழுவணி, குண்டு குளம், தொட்டியங்குளம், திம்மாபுரம், வேப்பங்குளம், முஷ்டக்குறிச்சி, தேசியனேந்தல், எஸ். நாகூர், மேலகள்ளங்குளம், ஆவியூர், அரசகுலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story