நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

ராஜபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர்.ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், பொன்னகரம், எம்.ஆர். நகர், லட்சுமியாபுரம், ராம்கோநகர், நத்தம்பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

சோழபுரம்

அதுபோல நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் ஈஸ்ட் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் நல்லமநாயக்கன்பட்டி ரோடு, சிட்கோ காலனி, சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.


Next Story