ஆண்டிமடம், ஓலையூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


ஆண்டிமடம், ஓலையூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:22 AM IST (Updated: 21 Dec 2022 11:53 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம், ஓலையூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன், பாப்பாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலணிக்குழி, பாப்பாக்குடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்க நல்லூர், தென்னவநல்லூர், வேம்புகுடி, அழகர்கோவில், சலுப்பை, வெட்டியார்வெட்டு, இருதயபுரம், இளைய பெருமாநல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கோல்லை, குறுக்கு ரோடு, தழுதாழை மேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூர், கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம், ஓலையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story