அரவக்குறிச்சி, தென்னிலை, கரூர் ஜவுளி பூங்கா பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
அரவக்குறிச்சி, தென்னிலை, கரூர் ஜவுளி பூங்கா பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் மின் பகிர்மான வட்டம், கரூர் கோட்டத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி, ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரங்கநாதபுரம், தாளப்பட்டி
ஆகிய 8 துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே மேற்கண்ட பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது.
அதன்படி, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, ஈசநத்தம், இனுங்கனூர், குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி டவுன் பகுதி, ஆண்டிச்செட்டிப்பாளையம், தென்னிலை, கோடந்தூர், சின்னதாராபுரம், புஞ்சை காளக்குறிச்சி, நஞ்சை காளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், க.பரமத்தி, நெடுங்கூர், கரூர் ஜவுளி பூங்கா, காக்காவாடி, தும்பிவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.