ஏவூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
ஏவூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
முசிறி, ஜூன்.22-
முசிறி மின் கோட்டத்தில் உள்ள உயர் மின்னழுத்த பாதையில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி குணசீலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஏவூர் மின் பாதைகளில் உள்ள மணப்பாளையம், ஏவூர், ஆமூர், கோட்டூர், அந்தரப்பட்டி, அய்யம்பாளையம், உமையாள் புரம், செவந்தலிங்கபுரம், மாங்கரைப்பேட்டை, வாத்தலை, குணசீலம் மஞ்சகோரை, கரளாவழி, கருப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை இயக்கம் காத்தலும் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story