குமரன்நகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
குமரன்நகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி தென்னூர் நகரியம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி நகரியம் கோட்டம் சீனிவாசநகர் பிரிவுக்கு உட்பட்ட குமரன்நகர் 4-வது கிராஸ், 5-வது கிராஸ், 10-வது கிராஸ் முதல் 19-வது கிராஸ் வரை உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story