மணிகண்டம், அம்மாபேட்டை, அதவத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


மணிகண்டம், அம்மாபேட்டை, அதவத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

மணிகண்டம், அம்மாபேட்டை, அதவத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

மணிகண்டம்:

தமிழ்நாடு மின்சார வாரிய திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

மணிகண்டம், அம்மாபேட்டை, அதவத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதவத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், அதவத்தூர் சந்தை, முத்தூட் பிளாட், சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளக்காடு, கீரிக்கல்மேடு, ஒத்தக்கடை, இனியானூர், சரவணபுரம், சாந்தபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, வயலூர், பேரூர், கீழவயலூர், மேலப்பட்டி, குழுமணி, பெரியகருப்பூர், சோமரசம்பேட்டை, வாசன்நகர், வாசன்வேலி, அதவத்தூர், முள்ளிக்கரும்பூர், சாய்ராம் குடியிருப்பு, செவக்காடு, சிவந்தாநகர், மஞ்சான்கோப்பு ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story