ஒரத்தநாடு-கருக்காடிப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்


ஒரத்தநாடு-கருக்காடிப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

மின்கம்பம் மாற்றும் பணி காரணமாக ஒரத்தநாடு-கருக்காடிப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கருக்காடிப்பட்டி மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்கம்பம் மாற்றும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான தெக்கூர் வெட்டிக்காடு, பாச்சூர், கருக்காடிப்பட்டி, சோழபுரம், கக்கரக்கோட்டை, ஆதனக்கோட்டை மற்றும் அய்யம்பட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story