சிறுகனூர், உப்பிலியபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
சிறுகனூர், உப்பிலியபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சமயபுரம்:
ஸ்ரீரங்கம் மின்சார வாரிய இயக்கலும், பராமரித்தலும் பிரிவு செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சிறுகனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம் ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கூத்தனூர், ஸ்ரீதேவிமங்கலம், கொளக்குடி மற்றும் கண்ணாக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். இதேபோல் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான எஸ்.என்.புதூர், எ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், வெங்கட்டம்மாள் சமுத்திரம், பி.மேட்டூர், கே.புதூர், மாராடி, வேலம்பட்டி, கோனேரிப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ரெட்டியாப்பட்டி, கல்லாங்குத்து, சின்ன கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி, வைரபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்பளிப்பட்டி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.