தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மின்தடை

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர் மின்அழுத்த பாதைகளில் பழுதுகளை சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல், மரக்கிளைகளை அகற்றுதல், மின்பாதையில் தொங்கி கொண்டு இருக்கும் பட்டங்களை அகற்றுதல் போன்ற பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 ணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு, தந்தி ஆபீஸ் ரோடு, தெற்குப் புதுத்தெரு, விஇ.ரோடு, சந்தை ரோடு, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, மரக்குடி தெரு, பெரிய கோவில் தெரு, ஜெய்லானி தெரு, பாத்திமா நகர், சண்முகபுரம் தாமோதர நகர், ஜார்ஜ் ரோடு, மணிநகர், டூவிபுரம், மேல சண்முகபுரம், பெருமாள்புரம், சங்கராபுரம், பால விநாயகர் கோவில் தெரு, வி.இ.ரோடு, பங்களா தெரு, தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு, திரேஸ்புரம், பாரதிநகர், காமராஜ் நகர், கே.வி.கே.சாமி நகர்,

தருவைகுளம், பட்டினமருதூர், முத்தையாபுரம் ஜோதி சால்ட் உப்பள பகுதிகள், அபிராமி நகர், ராஜீவ் நகர், மகாலட்சுமி புரம், நேசமணி நகர், காந்தி நகர், பாலாஜி நகர், முள்ளக்காடு, சிப்காட் அருகே உள்ள பண்டாரம்பட்டி, சில்வர்புரம், வி.எம்.எஸ். நகர், சுப்பிரமணியபுரம், வடக்கு சங்கரப்பேரி, தெற்கு சங்கரப்பேரி, கங்கா பரமேஸ்வரி காலனி, கொத்தாளி, தென்னம்பட்டி, அயிரவன்பட்டி, பரிவில்லிக் கோட்டை, வேப்பங்குளம், கலப்பைபட்டி, மருதன் வாழ்வு, அய்யப்பபுரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் தனலட்சுமி தெரிவித்து உள்ளார்.

புதன்கிழமை

தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை சர்ச் தெரு, பெரியநாயகி புரம், ஹார்பர் பைபாஸ் ரோடு, அரசினர் குடியிருப்பு, கோரம்பள்ளம் மெயின் ரோடு, வங்கி தெரு, பாரதி நகர், பொன்நகர், கல்லூரிநகர், சாயர்புரம் அருகே உள்ள கட்டாங்குளம், முள்ளன்விளை, குமாரபுரம், செந்தியம்பலம், பழைய காயல் அருகே உள்ள கோவங்காடு உப்பள பகுதிகள், வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு, பக்கவெட்டி, முறப்பநாடு, வசவப்பபுரம், கீழபுத்தனேரி, மேலபுத்தனேரி, சென்னல்பட்டி, குளத்தூர் அருகே உள்ள சந்திரகிரி பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. எனவே மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று தூத:துக்கடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா தெரிவித்து உள்ளார்.


Next Story