திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் இன்று(சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேதமடைந்த மின்கம்பங்கள்

திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு, முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, திருச்செந்தூர் மாவீரன் நகர், குமாரபுரம், நந்தகுமாரபுரம், குமாரபுரம் மேற்கு, சீருடையார்புரம், கரிசன்விளை, சமத்துவபுரம், எள்ளுவிளை, குங்கப்பாள்புரம், அருணாச்சலபுரம், கொம்புதுறை, சிங்கிதுறை, அடைக்கலாபுரம் மெயின்ரோடு, வள்ளிவிளை, வானுபன்விளை ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நாசரேத்

அதேபோல், சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த உபமின் நிலையத்தை சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்தை சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தை சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிறுப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும், பழனியப்பபுரம் உப மின்நிலையத்தை சார்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதியிலும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

உடன்குடி

மேலும், உடன்குடி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற இருப்பதால் இதிலிருந்து மின்னூட்டம் பெறும் உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டிணம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story