இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
பராமரிப்பு பணி காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வாடிப்பட்டி,-
பராமரிப்பு பணி காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணி
சமயநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் கீழமாத்தூர் பீடர், அலங்காநல்லூர் துணை மின் நிலையத்தில் தேவசேரி மற்றும் அரியூர் பீடர்களில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழமாத்தூர், மேலமாத்தூர், கொடிமங்கலம் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டன்பட்டி, சிறுவாலை, குறவன் குளம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழச் சின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் நிறுத்தம்
மதுரை தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழையூர், கீழவளவு, செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ள நாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையப்பட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர், தர்மதானபட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அதேபோல் அழகர் கோவில், ஒத்தக்கடை, வலையங்குளம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாயக்கன்பட்டி, பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அழகாபுரி, அழகர்கோவில், டி.என்.ஏ.யு. நகர் முழுவதும், திருமோகூர், ராஜகம்பீரம், புது தாமரைப்பட்டி, இலங்கிப்பட்டி, மங்களபுரம், வி.எம். சிட்டி, வலையப்பட்டி ஆகிய இடங்களிலும் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.