இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ராமநாதபுரம்

கமுதி,

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அபிராமம், பெருநாழி

அபிராமம் மின்பாதையில் இன்று(ெவள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அபிராமம், முத்தாதிபுரம், அகத்தார் இருப்பு, நத்தம், அச்சங்குளம் ஆகிய கிராமங்களுக்கு இன்று காலை 10மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

பெருநாழி மின்பாதையில் இன்று பராமரிப்பு பணி நடப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை பெருநாழி, பொந்தம் புளி, பம்மனேந்தல், துத்தி நத்தம், திம்மநாதபுரம், எம்.சி.புரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்தார்.

காவனூர்

நயினார்கோவில் பிரிவிற்கு உட்பட்ட சாலைக்கிராமம், காவனூர் ஆகிய பிரிவு மின் பாதையில் பழுதான மின் கம்பங்கள் மாற்றும் பணி இன்று நடக்கிறது. எனவே காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தாளையடிகோட்டை, மேமங்களம், காவனூர், ராதாபுளி,பி.கொடிக்குளம், கொட்டக்குடி, மணக்குடி, ஆட்டாங்குடி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற் பொறியாளர் (பொறுப்பு) சவுந்தரராஜன் தெரிவித்தார்.

நாளை மின்தடை

ஆர்.எஸ்.மங்கலம் துணை மின்நிலையத்தில் சனவேலி உயர் அழுத்த மின்பாைதயில் சேதமடைந்த பழுதான மின்கம்பங்கள் சரி செய்யும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே சனவேலி, சவரியார்பட்டினம், புல்லமடை, ஓடைக்கால், கவ்வுர், ஏ.ஆர்.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல், செங்குடி, முத்துப்பட்டணம், சேத்திடல், வ.பரமக்குடி, சாத்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 2 வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) நிஷாக்ராஜா தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் அருகே வடகாடு பீடர் உயர் அழுத்த மின் பாதையில் பழுதான மின்கம்பங்களை நாளை மாற்றும் பணி நடக்கிறது. எனவே வடகாடு, குடியிருப்பு, இறால் பண்ணை பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story