ஆபத்தான நிலையில் மின்கம்பம்
நாகூரில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாகூர்:
நாகூரில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
நாகை மாவட்டம் நாகூரில் தர்கா குளத்தை சுற்றி தென்கரை, வடகரை, மேல்கரை, கிழக்குகரை ஆகிய 4 தெருக்கள் உள்ளன. அதன் ஒரு பகுதியான மேல்கரை தெரு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது முக்கியமான தெரு என்பதால் அதிக அளவில் வாகனங்கள் செல்லக்கூடிய இடமாக இருந்து வருகிறது.
மேல்கரை தெரு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
பொதுமக்கள் அச்சம்
எந்தநேரத்திலும் முறிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இந்த மின்கம்பம் அருகே குழந்தைகள் அதிக அளவில் விளையாடி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் குளம் அருகில் நிறுத்தப்படுகிறது. சில நேரங்களில் மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டால் அருகில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் தர்கா குளம் மேல்கரை தெருவில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.