பலத்த காற்றில் மின்கம்பம் சாய்ந்தது-25 வீடுகள் இருளில் மூழ்கின


பலத்த காற்றில் மின்கம்பம் சாய்ந்தது-25 வீடுகள் இருளில் மூழ்கின
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை முண்டக்கல் பகுதியில் ஒரு மின்கம்பம் காற்றில் சாய்ந்தது

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை முண்டக்கல் பகுதியில் ஒரு மின்கம்பம் காற்றில் சாய்ந்தது.

திருவட்டார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையுடன் அவ்வப்போது பலத்த காற்று வீசியது. இதில் திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை முண்டக்கல் பகுதியில் ஒரு மின்கம்பம் காற்றில் சாய்ந்தது. இதனால், அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டு சுமார் 25 வீடுகள் இருளில் மூழ்கின. மின்கம்பம் விழுந்த போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுதொடர்பாக பொதுமக்கள் குலசேகரம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்கம்பத்தை சீரமைத்து மின் இணைப்பை சரி செய்தனர். இதுபோல் திருவட்டார் காங்கரை பகுதியில் உள்ள ஒரு வங்கியின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு காற்றில் கிழிந்து சேதமடைந்தது.


Next Story