19-ந் தேதி மின் நிறுத்தம்
பூண்டி, சாலியமங்கலம் பகுதியில் 19-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்;
தஞ்சையை அடுத்த பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர் நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர்,களஞ்சேரி, இருப்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்தேவன், குடிக்காடு அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியமபாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story