8-ந்தேதிக்கு மின் நிறுத்தம் மாற்றம்
தஞ்சையில் 8-ந்தேதிக்கு மின் நிறுத்தம் மாற்றம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்;
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலைய பகுதியில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி காரணமாக வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த மின் நிறுத்தம் நிர்வாக வசதி காரணமாக 8-ந்தேதிக்கு (சனிக்கிழமை) மாற்றப்படுகிறது. அன்று காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் மின் வழித்தடத்தில் உள்ள காவேரி கல்யாணமண்டம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் மேரீஸ்கார்னர் மின்பாதையில் அருளானந்ததம்மாள் நகர் 1-வது தெரு வரை உள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.