பொறையாறு-செம்பனார்கோவில் பகுதியில் மின் நிறுத்தம்


பொறையாறு-செம்பனார்கோவில் பகுதியில்  மின் நிறுத்தம்
x

பொறையாறு-செம்பனார்கோவில் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மயிலாடுதுறை

பொறையாறு, கிடாரங்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரப்பாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்ணப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டி, சாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர், கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், பரசலூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், கருவி, செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, முடிகண்டநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார். இதேபோல் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், மாதானம், ஆணைக்காரன் சத்திரம், புத்தூர், மங்கைமடம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.


Next Story