நாகை கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்


நாகை கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 5 May 2023 12:30 AM IST (Updated: 5 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

நாகை கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக இயக்குதலும் பராமரித்தலும் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை நகரம்

நாகை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் நாகை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நாகை நகரம், வெளிப்பாளையம், சிக்கல், தோணித்துறை, பழைய வேளாங்கண்ணி, பரவை உள்ளிட்ட பகுதிகள்.

நாகூர்-நரிமணம்

நாகை அர்பன் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கலெக்டர் அலுவலகப் பகுதி, அரசு மருத்துவமனை, நாகூர் தர்கா ஆகிய பகுதிகள். நரிமணம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கொட்டாரக்குடி, பூதங்குடி, உத்தம சோழபுரம் ஆகிய பகுதிகள். திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருமருகல், பொரக்குடி, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், மருங்கூர், சியாத்தமங்கை, ஏர்வாடி, சேஷமூலை உள்ளிட்ட பகுதிகள்.

திட்டச்சேரி துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ப.கொந்தகை, பனங்குடி, மரைக்கான்சாவடி, குத்தாலம், வாழ்மங்களம் திட்டச்சேரி ஆகிய பகுதிகள்.

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வேளாங்கண்ணி, கிராமத்து மேடு, தெற்குபொய்கை நல்லூர், பிரதாபராமபுரம் மின்பாதையில் உள்ள பகுதிகளுக்கும், வேட்டைகாரனிருப்பு துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான விழுந்தமாவடி, திருப்பூண்டி, நாலுவேதபதி மற்றும் புதுப்பள்ளி மின்பாதையில் உள்ள பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story